சிங்கத்தின் கோட்டைக்குள் கெலக்ஸி!: சீண்டிப்பார்க்கும் செம்சுங் - miCroPlenTifuL.com
Headlines News :
WWLCOME THIS MY SITE
Home » » சிங்கத்தின் கோட்டைக்குள் கெலக்ஸி!: சீண்டிப்பார்க்கும் செம்சுங்

சிங்கத்தின் கோட்டைக்குள் கெலக்ஸி!: சீண்டிப்பார்க்கும் செம்சுங்

Written By KAJANTHAN JS on Tuesday 26 February 2013 | 16:30


சிங்கத்தின் கோட்டைக்குள் கெலக்ஸி!: சீண்டிப்பார்க்கும் செம்சுங்

தற்போதைய சந்தை நிலவரங்களின் படி ஸ்மார்ட் போன் சந்தையில் ராஜா யார்? என்று கேட்டால் நிச்சயமாக அது செம்சுங் தான்.
அப்பிள் என்ற ஜாம்பவான் சந்தையில் இருப்பினும் ஒவ்வொரு ஸ்மார்ட் போனையும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன்  தொழில்நுட்பத்தில் மேம்பட்ட தயாரிப்பாக வெளியிடுவது செம்சுங்கின் சிறப்பு.
இவ்வகையில் செம்சுங்கின் கெலக்ஸி வரிசை ஸ்மார்ட் போன்கள் சந்தையில் நல்லவரவேற்பைப் பெற்றவை.
சாதாரணமாக இருந்த செம்சுங்கை ராஜாவாக்கியதும் கெலக்ஸி வரிசை ஸ்மார்ட் போன்களாகும்.

குறிப்பாக கெலக்ஸி எஸ், எஸ் 2, எஸ் 3 ஆகிய மாதிரிகள் விற்பனையில் சாதனை படைத்தவை.
செம்சுங் கெலக்ஸி எஸ் வரிசையில் இறுதியாக வெளியாகியது எஸ் 3, இதுவும்  முன்னையை வெளியீடுகளைப் போல நல்ல வரவேற்பைப் பெற்றது.
இது வெளியாகி சில மாதங்களிலேயே இதன் அடுத்த வெளியீடு என்னவாக இருக்குமெனெ  பலரும் எதிர்ப்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
தற்போது அதற்கான காலம் கனிந்து விட்டது. ஆம், செம்சுங் அடுத்த கெலக்ஸி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தவுள்ளது.
இது கெலக்ஸி எஸ் 4 ஆக இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த அறிமுக நிகழ்வு மார்ச் மாதம் 14 ஆம் திகதி நிவ்யோர்கில் இடம்பெறவுள்ளது.இதற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழ்களையும் செம்சுங் அனுப்பியுள்ளது.
http://www.virakesari.lk/image_article/gsmarena_002.jpg
எனவே இன்னும் சில வாரங்களில்  செம்சுங் கெலக்ஸி எஸ் 4 எப்படி இருக்கப்போகின்றது, என்ன தொழிநுட்ப அம்சங்களை உள்ளடக்கியிருக்கப்போகின்றது என தெரிந்து விடும்.
இதேவேளை சுமார் 3 வருடங்களின் பின்னர் செம்சுங் சுமார்  தனது ஸ்மார்ட் போனொன்றிற்கான அறிமுக நிகழ்வை அமெரிக்காவில்  நடத்தவுள்ளது.
அப்பிள் எனும் சிங்கத்தின் கோட்டையான அமெரிக்காவில் இது நடைபெறுகின்றமை  இந்நிகழ்விற்கு கூடிய சிறப்பு சேர்க்கின்றது.
குறிப்பாக அப்பிள் மற்றும் செம்சுங் இடையிலா மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்நிகழ்வு அங்கு இடம்பெறவுள்ளது. 
பல தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே இதனை நடத்துவதாக செம்சுங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. miCroPlenTifuL.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger